கொத்தாக 9,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய பிரபல நிறுவனம்
டேனிஷ் மருந்து நிறுவனமான நோவோ நோர்டிஸ்க் சுமார் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
5000 பேர்கள்
அந்த நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பணியாற்றும் 78,400 ஊழியர்களில் இது 11.5 சதவீதம் என்றே கூறுகின்றனர். பிரபல எடை இழப்பு மருந்தான வெகோவியின் தயாரிப்பாளரான நோவோ நோர்டிஸ்க்,
நிறுவன கட்டமைப்பை எளிமைப்படுத்தவும், முடிவெடுப்பதை விரைவுபடுத்தவும், நீரிழிவு மற்றும் உடல் பருமன் பிரிவுக்கு அதிக நிதியை மறு ஒதுக்கீடு செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.
வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களில் 5000 பேர்கள் டென்மார்க்கில் அமைந்துள்ள நோவோ நோர்டிஸ்கில் பணியாற்றியவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவு நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மஸ்யார் மைக் தூஸ்தரின் முதல் பெரிய நடவடிக்கையாகும். தற்போது, நோவோ நோர்டிஸ்க் அமெரிக்க சந்தைப் பங்கைப் பராமரிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கிறது.
நோவோ நோர்டிஸ்க் என்பது பாக்சுவார்டை தலைமையிடமாகக் கொண்ட ஒரு டென்மார்க் பன்னாட்டு மருந்து நிறுவனமாகும், இது ஒன்பது நாடுகளில் உற்பத்தி வசதிகளையும் ஐந்து நாடுகளில் துணை நிறுவனங்கள் அல்லது அலுவலகங்களையும் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |