ஒரே வாரத்தில் கை கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்
Beauty Tips
By Balamanuvelan
பொதுவாக நம்மில் பலர் முகத்திற்கு மட்டுமன்றி, கை மற்றும் கால்களுக்கும் போதிய பராமரிப்பு கொடுப்பதில்லை.
சொல்லப்போனால் முகத்தை விட, கை மற்றும் கால்களுக்கு சற்று அதிகமாகவே பராமரிப்பு அவசியம்.
ஏனெனில் வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்களின் தாக்கம், முகத்தை விட, கை மற்றும் கால்களில் தான் அதிகம் உள்ளது.
இதனால் கை மற்றும் கால்கள் கருப்பாக இருக்கும். எனவே இவற்றை எளிய முறையில் கூட போக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- ஒரு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை கை கால் முட்டிகளில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். பின் 15 நிமிடங்கள் காத்திருந்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வர ஒரே வாரத்தில் கை கால்களில் உள்ள கருமை நீங்க ஆரம்பிக்கும்.
- ஒரு சிறிய பவுலில் சிறிதளவு காய்ச்சாத பாலினை எடுத்து கொள்ளுங்கள். பின் அரை எலுமிச்சை பழத்தினை இந்த பாலில் தொட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு கை மற்றும் கால் முட்டிகளில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சில நாட்களிலேயே கை, கால்களில் உள்ள கருமைகள் நீங்க ஆரம்பிக்கும்.
- கை கால் வெள்ளையாக இந்த டிப்ஸை பாலோ செய்யுங்கள், அதாவது ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் காபி பவுடர், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கை மற்றும் கால்களில் உள்ள கருமை பகுதியில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.
பிறகு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கை கால் கருமை நீங்கி, வெள்ளையாக மாறுவதை தாங்களே உணருவீர்கள்.
- ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 3 அல்லது 4 ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை கருமையாக உள்ள இடங்களில் நன்றாக அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து கை கருமை நிறம் மாற ஆரம்பிக்கும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US