7.5 மில்லியன் boAt பயனர்களின் விவரங்கள் திருட்டு! அதிர்ச்சி தகவல்
boAt எனும் பிராண்டின் சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட விவரங்கள் Dark Webயில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
boAt நிறுவனம்
பாரிய சைபர் தாக்குதல் குறித்து Forbes India எச்சரிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி boAt நிறுவனம் தான் இந்த சைபர் தாக்குதலை (Cyber attack) சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட் (boAt) நிறுவனத்தின் Earbuds, Headphones, ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch), Audio Products மற்றும் Lifestyle ஆகிய பொருட்களை பயன்படுத்தியதன் மூலம், சுமார் 7.5 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட விபரங்கள் இந்த சைபர் தாக்குதல் மூலம் திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் பயனர்களின் பெயர்கள், முகவரிகள், தொடர்பு எண்கள், மின்னஞ்சல் ID, வாடிக்கையாளர் ID போன்ற விவரங்கள் திருடப்பட்டுள்ளதால், இது மிகவும் மோசமான தகவல் திருட்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dark Webயில் லீக்
மேலும், இந்த ஒட்டுமொத்த தகவல்களும் சுமார் 2 GB அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. இது Dark Webயில் லீக் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
boAt Lifestyle தளத்தை குறிவைத்து ஏப்ரல் 5, 2024ஆம் திகதி அன்று ShopifyGUY என்ற ஹேக்கரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதில் boAt-யின் தயாரிப்புகளை சமீபத்தில் வாங்கிய வாடிக்கையாளர்களின் தகவல் முதல், இதுவரை boAt தயாரிப்புகளை வாங்கிய பல ஆண்டுகளுக்கு முந்தைய பயனர்களின் தகவல்கள் வரை இதில் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோகவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், தனிநபர்கள் நிதி மோசடி, ஃபிஷிங் மற்றும் அடையாள திருட்டு ஆகியவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் boAt நிறுவனம் தனது வாடிக்கையாளர் நம்பிக்கையை இழந்துள்ளதால், தற்போது அதன் தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |