ரன் வேட்டையாடிய டேர்ல் மிட்செல்: அடிகொடுத்த சீல்ஸ்..மேற்கிந்திய தீவுகளுக்கு 270 இலக்கு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 269 ஓட்டங்கள் எடுத்தது.
கான்வே 49 அவுட்
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சின் ஹக்லே ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. 
முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா 4 ஓட்டங்களிலும், வில் யங் ஓட்டங்கள் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் 49 ஓட்டங்களில் இருந்த டெவோன் கான்வே (Devon Conway) ஆட்டமிழக்க, டேர்ல் மிட்செல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன்மூலம் அணியின் ஸ்கோர் உயர, மைக்கேல் பிரேஸ்வெல் 35 (52) ஓட்டங்கள் எடுத்த நிலையில் சேஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
டேர்ல் மிட்செல் சதம்
இதற்கிடையில் டேர்ல் மிட்செல் (Daryl Mitchell) தனது 7வது சதத்தை பதிவு செய்தார். 118 பந்துகளை எதிர்கொண்ட மிட்செல் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 119 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் ஸகாரி ஃபௌக்ஸ் 16 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 22 ஓட்டங்கள் விளாச, நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 269 ஓட்டங்கள் குவித்தது.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் (Jayden Seales) 3 விக்கெட்டுகளும், ஃபோர்டே 2 விக்கெட்டுகளும், கிரேவ்ஸ் மற்றும் சேஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |