இந்திய அணியை துவம்சம் செய்த ஒற்றை வீரர்! ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட ஷமி..அதகளமான மைதானம்
இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 273 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அரைசதம் அடித்த ரச்சின்
தரம்சாலா மைதானத்தில் தொடங்கியுள்ள இப்போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களை சொற்ப ஓட்டங்களில் சிராஜ், ஷமி வெளியேற்றினர்.
அதன் பின்னர் கைகோர்த்த ரச்சின் ரவீந்திரா, டெர்ல் மிட்செல் கூட்டணி இந்திய பந்துவீச்சு நெருக்கடி கொடுத்தது. இருவரும் நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அணியின் ஸ்கோர் 178 ஆக உயர்ந்த நிலையில், அரைசதம் அடித்த ரச்சின் 75 (87) ஓட்டங்களில் ஷமி ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் குல்தீப், பும்ரா ஓவரில் நடையை கட்டினர்.
AP
பிலிப்ஸ் தனது பங்குக்கு 23 ஓட்டங்கள் எடுத்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மிட்செல் வாணவேடிக்கை காட்டினார். இதற்கிடையில் சான்ட்னர், ஹென்றியின் ஸ்டம்ப்புகளை ஷமி பறக்கவிட்டார்.
மிட்செல் 130
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5வது சதம் விளாசிய மிட்செல் 130 (127) ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஷமி ஓவரில் அவுட் ஆனார். இதன்மூலம் உலகக்கோப்பையில் 2 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
PTI
50வது ஓவரின் கடைசி பந்தில் பெர்குசன் ரன் அவுட் ஆக நியூசிலாந்து அணி 273 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Twitter (@BCCI)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |