திடீரென அழைக்கப்பட்ட இலங்கை வீரர்: குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்தார்
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாட இலங்கை வீரர் தசுன் ஷானக அழைக்கப்பட்டுள்ளார்.
பிலிப்ஸ் காயம்
குஜராத் டைட்டன்ஸ் அணியில் நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாட எடுக்கப்பட்டிருந்தார்.
கடந்த 6ஆம் திகதி ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பிலிப்ஸ் காயமுற்றார். அதன் பின்னர் அவர் நியூஸிலாந்திற்கு திரும்பிய நிலையில், அவர் விரைவில் குணமடைய குஜராத் அணி வாழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து, கிளென் பிலிப்ஸுக்கு (Glenn Phillips) பதிலாக விளையாட இலங்கையின் தசுன் ஷானக அழைக்கப்பட்டார்.
தசுன் ஷானக சேர்ப்பு
நேற்றைய தினம் தசுன் ஷானக (Dasun Shanaka) தங்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக குஜராத் டைட்டன்ஸ் அணி அறிவித்தது.
தசுன் ஷானக சமீப காலமாக கிரிக்கெட் வட்டாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவர் சர்வதேச லீக் டி20 போட்டியில் துபாய் கேபிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்தார்.
அங்கு அவரது அணி பட்டத்தை வென்றது. பின்னர் இலங்கை திரும்பிய அவர், தம்புள்ளை அணிக்காக நான்கு நாள் போட்டியில் விளையாடினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |