அது எங்களுக்கு ஒரு பெரிய பாடம்! படுதோல்வி குறித்து பேசிய RCB கேப்டன்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணித்தலைவர் கருத்து தெரிவித்தார்.
பஞ்சாப் கிங்ஸ் வெற்றி
ஐபிஎல் 2025யின் நேற்றைய லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
மழை காரணமாக 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 95 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 98 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. RCB சொந்த மண்ணில் தோல்வியுற்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
2️⃣ sharp catches 🫡
— IndianPremierLeague (@IPL) April 18, 2025
2️⃣ early strikes ✌
Arshdeep Singh and #PBKS with a solid start ⚡
Updates ▶ https://t.co/7fIn60rqKZ #TATAIPL | #RCBvPBKS | @PunjabKingsIPL pic.twitter.com/jCt2NiuYEH
சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்
தோல்வி குறித்து RCB அணித்தலைவர் கூறுகையில், "ஒரு துடுப்பாட்ட யூனிட்டாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். பார்ட்னர்ஷிப்கள் முக்கியம், நாங்கள் விரைவான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அது எங்களுக்கு ஒரு பெரிய பாடம்.
சூழ்நிலைகள் காரணமாக (படிக்கலை விடுத்து) நாங்கள் அந்த மாற்றத்தை செய்ய வேண்டியிருந்தது. விக்கெட் அவ்வளவு மோசமாக இல்லை. அது நீண்ட காலமாக மூடிய நிலையில் இருந்தது.
அது அவர்களின் பந்துவீச்சாளர்களுக்கு உதவியது, பாராட்டு அவர்களுக்கு சேரும். பந்துவீச்சு யூனிட் நன்றாக செயல்படுகிறது. அது ஒரு பெரிய நேர்மறையான விடயம்.
துடுப்பாட்ட வீரர்கள் நோக்கத்துடன் விளையாடியுள்ளனர். அது மகிழ்ச்சியளிக்கும் விடயம். துடுப்பாட்ட யூனிட்டில் நாங்கள் சில தவறுகளை நாம் சரிசெய்ய முடியும்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |