மகாராணியின் இறுதிச் சடங்கு திகதி அறிவிப்பு: பிரித்தானிய வங்கிகளுக்கு பொது விடுமுறை

London United Kingdom Queen Elizabeth II Prince William King Charles III
By Thiru Sep 11, 2022 03:14 PM GMT
Report

செப்டம்பர் 19ம் திகதி ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நடைபெறும்.

பிரித்தானிய வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில்(Westminster Abbey )  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் ராணியாக 70 ஆண்டுகள் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் உடல்நல குறைவு காரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்தார்.

மகாராணியின் இறுதிச் சடங்கு திகதி அறிவிப்பு: பிரித்தானிய வங்கிகளுக்கு பொது விடுமுறை | Date Of Uk Queen Elizabeth Ii S Funeral Confirmed

இதனைத் தொடர்ந்து மகாராணியின் இறப்பிற்கு பல்வேறு உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பிரித்தானியாவின் புதிய மன்னராக ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன், மூன்றாம் சார்லஸ் பிரித்தானியா மற்றும் 14 நாடுகளுக்கு மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்-தின்(Queen Elizabeth II) இறுதிச் சடங்குகளுக்கான திகதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் ஏற்பாடுகளுக்கு பொறுப்பான நார்போக் டியூக் ஏர்ல் மார்ஷலால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராணியின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக மகாராணியின் பூத உடல் செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பால்மோரல் தோட்டத்தில் இருந்து ஆறு விளையாட்டு வீரர்களால் ஹோலிரூட்ஹவுஸ்( Holyroodhouse )  அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்படும்.

மகாராணியின் இறுதிச் சடங்கு திகதி அறிவிப்பு: பிரித்தானிய வங்கிகளுக்கு பொது விடுமுறை | Date Of Uk Queen Elizabeth Ii S Funeral ConfirmedSky News

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை ராணியின் பூத உடல் ஹோலிரூட்ஹவுஸிலிருந்து செயின்ட் கில்ஸ் கதீட்ரல் வரை ஒரு ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் செப்டம்பர்  13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ராணியின் பூத உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்படும்.

அதற்கு அடுத்த நாள் செப்டம்பர்  14 ஆம் திகதி புதன்கிழமை ராணியாரின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டி மீது  இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் மற்றும் மலர் மாலை வைக்கப்படும்.

மகாராணியின் இறுதிச் சடங்கு திகதி அறிவிப்பு: பிரித்தானிய வங்கிகளுக்கு பொது விடுமுறை | Date Of Uk Queen Elizabeth Ii S Funeral ConfirmedSky News

இறுதியாக செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மகாராணி இரண்டாம் எலிசபெத்-திற்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கும் புதிய அரசர்: மன்னர் மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இந்த இறுதிச் சடங்கில் யார் யார் கலந்து கொள்வார்கள் போன்ற தகவல்கள் குறித்த விவரங்கள் அடுத்த வாரம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US