அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கும் புதிய அரசர்: மன்னர் மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளின் தலைவராக மன்னர் மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
மன்னர் மூன்றாம் சார்லஸ் மீது எங்கள் மக்கள் ஆழமான மரியாதை கொண்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளின் தலைநகரங்களிலும் நடைபெற்ற விழாக்களில் நாட்டின் தலைவராக மன்னர் மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் தனது 96 ஆவது வயதில் உயிரிழந்ததை தொடர்ந்து, பிரித்தானியா மற்றும் அதற்கு வெளியே உள்ள 14 நாடுகளுக்கு புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
REUTERS
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளின் தலைநகரங்களிலும் நடைபெற்ற விழாவில் மன்னர் மூன்றாம் சார்லஸ் நாட்டின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், ராணியின் மறைவை தொடர்ந்து, மாட்சிமை வாய்ந்த மன்னர் மூன்றாம் சார்லஸ் எங்கள் இறையாண்மை என்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
GETTY IMAGES
அத்துடன் மன்னர் மூன்றாம் சார்லஸ் நமது தேசத்தின் மீது தனது ஆழ்ந்த அக்கறையை தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளார், இந்த உறவு எங்கள் மக்களால் ஆழமாக மதிக்கப்படுகிறது, மேலும் இந்த உறவு தற்போது கூடுதலாக ஆழமடையும் என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி, மற்றும் அவுஸ்திரேலியாவின் பிரித்தானிய மன்னரின் பிரதிநிதி ஆகியோர் மன்னர் மூன்றாம் சார்லஸ்-சை நாட்டின் தலைவராக நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
REUTERS
இதனை வானில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரகடனம் செய்தனர். பிரித்தானிய மகாராணியின் மறைவை தொடர்ந்து ராணிக்கு தேசிய துக்க தினம் செப்டம்பர் 22ம் திகதி அனுசரிக்கப்படும் என்றும், அன்றைய தினம் நாட்டின் பொது விடுமுறையாக இருக்கும் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: போட்டோஷூட்டுக்கு தாமதித்த பிரித்தானிய மகாராணி: கிரீடத்தை கழற்றுமாறு கூறிய புகைப்பட கலைஞர்!
மேலும் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் குறித்து தெரிவித்த பேசிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், மன்னர் சார்லஸ் தனது சொந்த பாதையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.