உடலிற்கு வலுசேர்க்கும் பேரிச்சம்பழ அல்வா.., இலகுவாக செய்வது எப்படி?
இந்த சுவையான பேரிச்சம்பழ அல்வா குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் சத்தான ஒன்று.
அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த சுவையான பேரிச்சம்பழ அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பேரீச்சம் பழம்- 250g
- கடலை பருப்பு- ¾ கப்
- நெய்- ½ கப்
- பாதாம்- 8
- சர்க்கரை- 3 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- பால்- 3 கப்
செய்முறை
முதலில் கடலைப் பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் நன்கு ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு அடி கனமான கடாயில் மூன்று கப் பால் சேர்த்து இந்த கடலை பருப்பை வேகவைத்து கடலைப் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் பேரீச்சம் பழத்தை அரை கப் சூடான பாலில் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக விழுதாக அரைக்கவும்.
இதற்குப் பிறகு ஒரு சிறிய கடாயில் நெய் சேர்த்து பாதாம் பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
பின் அதே கடாயில் அரைத்து வைத்த கடலைப் பருப்பு கலவையை சேர்த்து கிளறி விடவும்.
பிறகு பாலுடன் அரைத்து வைத்துள்ள பேரீச்சம் பழ விழுதை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வரை நன்றாக கிளறவும்.
இறுதியாக இதில் ஏலக்காய் பொடி சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பின் கொதிக்க விட்டு கிளறி அடுப்பை அணைத்து விட்டு இறக்கினால் சுவையான பேரீச்சம்பழ அல்வா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |