முழங்கால் வரை முடி வளர இந்த எண்ணெய் போதும்: எப்படி பயன்படுத்தலாம்?
பேரீச்சம்பழ எண்ணெய் பயன்பாடு அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி மற்றும் மருந்துத் தொழில்களில் வளர்ந்துள்ளது.
பேரீச்சம்பழ எண்ணெய் முக்கியமாக ஒலிக், லினோலிக், லாரிக் மற்றும் பால்மிடிக் அமிலம் ஆகிய நான்கு கொழுப்பு அமிலங்களால் ஆனது.
அமினோ அமிலம் கெரட்டின் உற்பத்திக்கு இன்றியமையாதது, இது முடிகளை வலுப்படுத்துவதற்கும் முடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் பொறுப்பான புரதமாகும்.
ரிபோஃப்ளேவின் ஆற்றல் உற்பத்தி மற்றும் செல்லுலார் செயல்பாடு மற்றும் வளர்ச்சியை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பேரீச்சம்பழ எண்ணெயில் அதிக அமினோ அமிலம் மற்றும் வைட்டமின் பி2 உள்ளது, இது முடி உதிர்வைத் தடுக்கும்.
முடி உதிர்வை நிறுத்துவது தொடங்கி அடர்த்தியான முடி, பொடுகு இல்லா முடி வளர்ச்சிக்கு, நரை முடியை தடுக்கவும் பேரீச்சம் பழ எண்ணெய் உதவுகிறது.
Getty Images
நீளமாக முடி வளர பேரீச்சம் பழ எண்ணெய்யை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
பேரீச்சம் பழ எண்ணெய் பயன்படுத்தும் முறை
பேரீச்சம்பழ எண்ணெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடிகளுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
இந்த எண்ணெய் உச்சந்தலையில் மற்றும் முடியில் மசாஜ் செய்வதற்கு மிகவும் ஏற்றது.
இந்த எண்ணெய்யை நேரடியாக தலையில் தடவுவதை விட தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில், ஆர்கன் எண்ணெய் இவற்றுடன் சேர்த்து மிக்ஸ் செய்து தலையில் தடவவும்.
அல்லது இந்த எண்ணெயை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து பின்பு ஹேர் வாஷ் செய்யவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |