அப்பாவை கோடரியால் தாக்கிக் கொன்ற மகள்! அதிர்ச்சி சம்பவம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் வயதான தந்தையை மகளே கோடரியால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கணவருடன் தகராறு
கர்நாடக மாவட்டம் ராமநகரின் நாய்தோலே கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பலதா(30). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தோட்டத்து வீட்டில் இருக்கும்போது கடந்த 18ஆம் திகதி தந்தை குச்சேரய்யாவுடன் புஷ்பலதாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த புஷ்பலதா, கோடரி ஒன்றை எடுத்து வயதான தந்தையை பலமாக தாக்கியுள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த குச்சேரய்யா பரிதாபமாக இறந்துள்ளார். உடனே புஷ்பலதா அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தலைமறைவான மகள்
நேற்று முன்தினம் மாலையில் தான் குச்சேரய்யா கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. உறவினர் ஒருவர் குச்சேரய்யாவை காண சென்றபோது அவர் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குச்சேரய்யாவின் உடல் கைப்பற்றப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், புஷ்பலதா கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிய வந்துள்ளது.
அதேபோல் பணப்பிரச்சனையில் தந்தையை அவர் கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், தலைமறைவான புஷ்பலதாவை தேடி வருகின்றனர்.
[DZ83F3 ] Getty Images/iStockphoto
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |