போலி வீடியோவால் மணிப்பூரில் பெண்களுக்கு வன்கொடுமை! முதல் குற்றவாளி கைது..திடுக்கிடும் தகவல்கள்
இந்திய மாநிலம் மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேரதிர்ச்சி சம்பவம்
மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடி இன பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், தற்போது இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்து 77 நாட்கள் கழித்து ஹுய்ரெம் மெய்தே என்ற அந்நபரை கைதாகியுள்ளார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் கூறிய விடயம் அதிர்ச்சியை மேலும் ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கிராமத்தை அந்த கும்பல் தாக்கும்போது பொலிஸாரும் அங்கு இருந்ததாகவும், ஊரை தாண்டியதும் தங்களை அந்த கும்பலிடம் பொலிஸார் விட்டுச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், அந்த கும்பலில் தனது சகோதரனின் நண்பன் உட்பட ஒரு சிலரை மட்டுமே அடையாளம் காட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போலி வீடியோ
இந்த நிலையில், தங்கள் சமூக பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று பரவியதை நம்பி குறித்த கும்பல் இந்த அட்டூழியத்தை செய்ததாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
போலியான வீடியோவை நம்பியே இரு பெண்களை அவர்கள் நிர்வாணப்படுத்தி வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் தன் சகோதரியை பாதுகாக்க முயன்ற 19 வயது நபரை அந்த கும்பல் கொலை செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |