பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி துடிதுடிக்க நரபலி கொடுத்த பெற்றோர்- பகீர் சம்பவம்

Crime Murder Occultism Chittoor district superstition
By Balakumar Jan 25, 2021 12:23 PM GMT
Report

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில், மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் உள்ள ஆசிரியர் காலனியில் புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா தம்பதியினர் வசித்து வருகினற்னர். புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராகவும், பத்மஜா மாஸ்டர் மைண்ட் பள்ளியின் முதல்வராகவும் உள்ளனர்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அலேக்கியா (27) MBA படித்துவிட்டு வடஇந்திய மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இளைய மகள் சாய் திவ்யா (22) ஏ.ஆர். ரகுமானின் இசைப் பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இந்த லக்கடவுனில் இருவரும் கடந்த 9 மாதங்களாக பெற்றோர்களுடன் ஆந்திராவில் தங்கியுள்ளனர்.  

ஆன்மீகத்தை அதிகம் நம்பும் புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா இருவரும் சமீப நாட்களாக வீட்டில் சில பூஜைகளை நடத்திவந்துள்ளனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி என்ற சூழலில், வீட்டில் ரகசிய சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

திடீரென இவர்களது வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பயந்துபோன அக்கம் பக்கத்தினர், காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அவர்களது வீட்டுக்கு வந்த பொலிஸ் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். ஆனால் திறக்க மறுத்த தம்பதி ஏடாகூடமாக பதிலளித்துள்ளார்.

சந்தேகமடைந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொடு உள்ளே சென்று பார்த்தால், இரண்டு மகள்களும் இரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளனர்.

அவர்களது உடலை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல போலீசார் முற்பட்ட நிலையில், தம்பதிகள் இருவரும் 'இந்த ஒரு இரவு காத்திருங்கள், எங்கள் குழந்தைகள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்" என்று கூறி உடல்களை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக பொலிஸார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அலேக்கியா மற்றும் சாய் திவ்யாவின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

மேற்பட்ட விசாரணையில், வீட்டிற்குள் பூஜைகளை செய்து கொண்டிருந்த தம்பதி, தங்களது இரண்டு மகள்களையும் முதலில் நிர்வாணமாக்கி தலையை மொட்டை அடித்துள்ளனர். பின்னர் பூஜையில் உட்காரவைத்து அவர்கள் இருவரது தலையிலும் உடற்பயிற்சி செய்யும் இரும்பு டம்பெல்களைக் கொண்டு அடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

மேலும், இவ்வாறு செய்தால் மொத்த குடும்பத்தாரின் ஆயுள் கூடும் என அவர்கள் நம்புவதாக கூறியுள்ளனர்.

விசாரணையின்போதும், தங்கள் பிள்ளைகள் மீண்டும் உயிரோடு வருவார்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்துள்ளனர்.

பட்டப்படிப்புகள் படித்திருந்தும், மூட நம்பிக்கையால் பெற்றோர்கள் சொந்த மகள்களையே நரபலி கொடுத்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US