உன்னை பிரிந்து இனி எப்படி இருக்கப்போகிறேன்! புற்றுநோயால் உயிரிழந்த டேவிட் மில்லரின் மகள்? வெளியான உண்மை
டேவிட் மில்லரின் மகள் உயிரிழந்துவிட்டதாக வைரலான புகைப்படங்கள்
தனது தீவிர ரசிகையின் மறைவுக்கு உருக்கமாக பதிவிட்ட டேவிட் மில்லர்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர், புற்றுநோயால் உயிரிழந்த சிறுமி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அடுத்த வாரம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தீவிர ரசிகையான ஐந்து வயது சிறுமி ஒருவர், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மனமுடைந்த டேவிட் மில்லர், குறித்த சிறுமியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, அவரை இழந்தது மிகப்பெரிய வருத்தம் என பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த மில்லரின் ரசிகர்கள் பலரும் குறித்த சிறுமி அவரது மகள் என நினைத்து தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதன் பின்னர் தான் அந்த சிறுமி மில்லர் மகள் இல்லை என தெரிய வந்துள்ளது.
எனினும் தனது தீவிர ரசிகையின் இறுதி சடங்கிற்கு செல்ல மில்லர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.