சிக்ஸர் மழையில் 142 ஓட்டங்கள்! தோனியின் அபார சாதனையை முறியடித்த மில்லர்
David miller blast 142 runs vs australia: ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி 8 சதங்கள் அடித்து மில்லர் சாதனை படைத்தார்.
தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் 8வது சதம் விளாசி, எம்.எஸ்.தோனியின் சாதனையை தகர்த்தார்.
டேவிட் மில்லர் சிக்ஸர்மழை
ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியில் டேவிட் மில்லர் 93 பந்துகளில் 142 ஓட்டங்கள் விளாசினார். டெம்பா பவுமா 103 ஓட்டங்கள் விளாச, தென் ஆப்பிரிக்கா 365 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 333 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மிட்செல் மார்ஷ் 84 ஓட்டங்களும், ட்ராவிஸ் ஹெட் 84 ஓட்டங்களும் விளாசினர். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
தொடரைக் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணி
இப்போட்டியில் சதம் விளாசியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் 5வது வரிசையில் களமிறங்கி அதிக சதங்கள் அடித்த எம்.எஸ்.தோனியின் சாதனையை டேவிட் மில்லர் (David Miller) முறியடித்தார்.
அதே சமயம் இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரின் சாதனையை சமன் செய்தார். இருவரும் 5வது அல்லது அதற்கு கீழ் வரிசையில் 8 சதங்கள் அடித்துள்ளனர்.
இவர்களுக்கு அடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர்களான எம்.எஸ்.தோனி, யுவராஜ் சிங் தலா 7 சதங்கள் அடித்துள்ளனர்.
