தவறை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர் - சிறை செல்வாரா?

David Warner Australia
By Karthikraja May 08, 2026 12:53 PM GMT
Report

மது அருந்தி வாகனம் ஒட்டிய வழக்கில் தவறை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர், சாதாரண குடிமகனுக்கு கிடைக்க கூடிய தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

டேவிட் வார்னர் மீது வழக்குப்பதிவு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர், சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற PSL தொடரில், கராச்சி கிங்ஸ் அணியின் அணித்தலைவராக விளையாடினார். 

தவறை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர் - சிறை செல்வாரா? | David Warner Accepts Drink Drive Face Punishment

போட்டிகளுக்கு இடையே ஒரு வாரத்திற்கு சிட்னி சென்ற அவர், கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அங்கு மதுபோதையில் வாகனம் ஒட்டியதாக காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.

பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 மடங்கு அதிகமாக மது அருந்தி வாகனம் ஓட்டியது தெரிய வந்தது.

இந்த வழக்கு நேற்று வேவர்லி உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வார்னருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சிறை செல்ல வாய்ப்பு?

சமூக ஒன்று கூடலில் நண்பரின் வீட்டில் 3 கிளாஸ் ஒயின் அருந்திய பிறகே அவர் வாகனம் ஒட்டிய முடிவு தவறானது, அவர் உபர் போன்ற வாகன சேவைகளைப் பயன்படுத்தியிருக்கலாம், தன் மீதான குற்றச்சாட்டுக்கு வார்னர் பொறுப்பேற்றுள்ளார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அடுத்த நீதிமன்ற விசாரணை வரும் ஜூன் 24 ஆம் திகதி நடைபெற உள்ளது. 

தவறை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர் - சிறை செல்வாரா? | David Warner Accepts Drink Drive Face Punishment

மேலும், வார்னர் எந்த சலுகையும் எதிர்பாராமல் சாதாரண குடிமகனுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ அதை ஏற்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

"கிரிக்கெட் NSWஇல், நாங்கள் பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதையே வலுவாக ஆதரிக்கிறோம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை அல்ல. இந்தக் குற்றச்சாட்டுகள் நிச்சயமாகக் கவலையளிப்பவையாக உள்ளன, நாங்கள் அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்" என கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் தலைமை நிர்வாகி லீ ஜெர்மன் கூறியுள்ளார்.

BBL தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் அணித்தலைவராக டேவிட் வார்னர் உள்ள நிலையில் அவரின் கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US