முடிவுக்கு வரும் டேவிட் வார்னரின் டெஸ்ட் கேரியர்! இறுதி திகதி அறிவிப்பு
அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
அடுத்த வாரம் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு அவுஸ்திரேலிய Opener டேவிட் வார்னர் தயாராகி வருகிறார்.
அதன் பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் அவர் விளையாட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வார்னர் அறிவித்துள்ளார்.
Jason O’Brien/PA
36 வயதாகும் வார்னர், சனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் வாழ்க்கையை முடிக்க விரும்புவதாக வெளிப்படுத்தியுள்ளார். இதனை அவுஸ்திரேலிய பயிற்சிக்கு முன்னதாக அவர் அறிவித்தார்.
மேலும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாகவும் அவர் ஓய்வு பெற விரும்புகிறார்.
AFP
டேவிட் வார்னர் ஓய்வு அறிவிப்பு
ஓய்வு குறித்து டேவிட் வார்னர் கூறுகையில், 'என்னைப் பொறுத்தவரை, நான் எப்போதும் ஒவ்வொரு ஆட்டத்தையும் எனது கடைசி ஆட்டமாக விளையாடி வருகிறேன். நான் நண்பர்களை சுற்றி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் விளையாட விரும்புகிறேன். எனக்கும் எனது குடும்பத்திற்கும் நான் கடன்பட்டிருக்கிறேன் - இங்கு ஓட்டங்கள் குவித்து அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து விளையாட முடிந்தால் - அந்த மேற்கிந்திய தீவுகள் தொடரில் நான் விளையாட மாட்டேன் என்று உறுதியாக கூற முடியும்.
AFP
என்னைப் பொறுத்தவரை, நான் ஐபிஎல் மற்றும் பிற சில franchise லீக்குகளிலும் விளையாடுவேன், அதன் பிறகு சூன் மாதத்தில் விளையாடுவேன். நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டும், யாருக்கு தெரியும், நான் திரும்பிச் சென்று நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக ஷீல்ட் கிரிக்கெட்டில் (அவுஸ்திரேலிய உள்நாட்டு கிரிக்கெட்) விளையாடலாம்' என தெரிவித்துள்ளார்.
AFP
இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 8158 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 25 சதங்கள், 34 அரைசதங்கள் அடக்கும். அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 335 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
Getty Images: Quinn Rooney