அப்பா உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க! நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் மகள் வெளியிட்ட உருக்கமான புகைப்படம்.. தவிக்கும் பரிதாபம்
உடனே கிளம்பி வீட்டுக்கு வாருங்கள் அப்பா என டேவிட் வார்னரின் மகள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2021 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பல ஆண்டுகள் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், தலைமைப் பயிற்சியாளர் டாம் மூடியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதோடு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அணியிலேயே இல்லை, இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் பந்து பொறுக்கிப் போட்ட காட்சியும் டிரிங்க்ஸ் சுமந்த காட்சியும் நெட்டிசன்களிடையே கடும் கோபத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியது.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசியவர் டேவிட் வார்னர், அவருக்கே இந்த கதியா என்று விமர்சனங்கள் எழுந்தன.
இதனிடையில் இந்தியாவிலிருந்து யாராக இருந்தாலும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையக் கூடாது, மீறினால் சிறைத்தண்டனை கடும் அபராதம் என்று பிரதமர் தடை உத்தரவு போட்டார்.
இந்த தடையை அடுத்து அவுஸ்திரேலிய வீரர்கள் மே 15ம் திகதிக்கு பிறகே சொந்த நாட்டுக்கு திரும்ப முடியும்.
இந்நிலையில் டேவிட் வார்னர் மகள் இவி வரைந்த படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில் அப்பா உடனே கிளம்பி வீட்டுக்கு வந்து விடுங்கள், நாங்கள் உங்களை ரொம்பவும் மிஸ் செய்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
ஆனாலும் கொரோனா நிலையால் மகளை தற்போது காணமுடியாத சூழலில் சிக்கி வார்னர் தவித்து வருகிறார்.