அவுட் இல்லாதற்கு அவுட் ஆகி வெளியேறிய வார்னர்! அப்பட்டாக டிவி ரீப்ளேயில் தெரிந்த காட்சி: ரசிகர்கள் அதிர்ச்சி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் அவுட் ஆகி வெளியேறிய வீடியோ காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
உலகக்கோப்பை டி20 தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இறுதியிப் போட்டியில் வரும் 14-ஆம் திகதி நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர், இந்த ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை கொடுத்து வந்தார்.
30 பந்தில் 49 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, டேவிட் வார்னர் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷ்வானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.
Match turning moment #DavidWarner @davidwarner31 @CricketAus @ICC @BCCI pic.twitter.com/Iv7LxQVwq9
— Sudhir Mishra (@SudhirYX50) November 11, 2021
ஆனால், டிவி ரீப்ளேவில் பந்தானது பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு அப்போது இரண்டு டி.ஆர்.எஸ் இருந்தது. அதாவது நடுவரின் முறையை எதிர்த்து மூன்றாவது நடுவருக்கு அப்பீல் செய்யலாம்.
ஆனால், டேவிட் வார்னர் அப்படி எதுவும் கேட்காமல் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
ஒருவேளை இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறாமல் போயிருந்தால், இது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.