பூமியில் ஒரு நாள் இனி 25 மணிநேரம் - விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்
எதிர்காலத்தில் பூமியில் ஒரு நாளானது 24 மணிநேரமாக காணப்படாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்
பூமியானது தனது அச்சின் கிழக்கில் இருந்து மேற்காக சுழல்கிறது. இந்த வேகமானர் ஒரு நாளின் மணித்தியாலத்தை அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் அனைத்து பகுதிகளும் சூரிய ஒளி, வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொண்டு காணப்படுகிறது.
காந்த இயக்கத்தின் காரணமாக வடக்கு அரைக்கோளத்தில் காற்றும் நீரும் வலப்புறமாக வளைகிறது.
தெற்கு அரைக்கோளத்தில் இடதுபுறமாக வளைகிறது. இதனால் வானிலை மற்றும் கடல் நீரோட்டங்கள் மாறுகின்றன.
பூமியானது அதன் அச்சில் சுழலும் போது ஒரு நாளின் நீளத்தை அதிகரித்துக்கொள்ளும். இதன் காரணமாக எதிர்வரும் காலத்தில் ஒரு நாளின் நீளம் அதிகரிக்க வாய்ப்பு காணப்படுகிறது.
அதாவது ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் வரை பகல் இருக்கும் சூழலில் எதிர்காலத்தில் அது அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து ஜேர்மனி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகையில், பூமியில் ஏற்படும் இந்த மாற்றமானது சுற்று சூழலின் மாற்றத்தால் நிகழ்வதாக கூறப்படுகிறது.
தற்போது இருக்கும் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால் நாளின் நீளம் மாறலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த மாற்றத்தை பூமியில் 20 அடி ஆழத்தில் வைக்கப்பட்டுள்ள ரிங் லேசர் மூலம் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
குறித்த நேர மாற்றமானது நிகழ்வதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு நாளின் நீளம் 18 மணி நேரம் 41 நிமிடங்களாக இருந்தது.
இந்நிலையில் தற்போது 20 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு 25 மணி நேரமாக அதிகரிக்கவிருக்கிறது.
மேலும் பூமியில் ஒரு நாள் 25 மணி நேரமாக அதிகரிக்கும்போது சந்திரன் பூமிக்கு மிக அருகில் காணப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |