அடுத்த போட்டிக்காக புனே புறப்படவிருந்த டெல்லி அணியின் பயணம் திடீர் ரத்து!
கொரோனா காரணமாக புனே புறப்படவிருந்த டெல்லி அணியின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 20ம் திகதி புனேவில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதவிருக்கின்றன.
இதற்காக தற்போது மும்பையில் இருக்கும் டெல்லி அணி இன்று புனே புறப்பட திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா காரணமாக இன்று திட்டமிடப்பட்டிருந்த டெல்லி அணியின் புனே பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாங்கள் அவரை நம்பினோம்... விரக்தியில் பேசிய ஜடேஜா!
முன்னதாக டெல்லி அணியின் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்க்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், Rapid Antigen சோதனையில் அணியில் மற்றொரு வீரருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது தொற்று பாதிப்பு இருப்பதை உறுதி செய்ய குறித்த வீரர் RT-PCR சோதனைக்கு உட்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம், இதனையடுத்து டெல்லி வீரர்கள் அனைவரும் மும்பை ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்று மற்றும் நாளை அவர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.