விராட் கோலியின் அரைசதம் வீண்! ருத்ரதாண்டவமாடியை வீரர்..பெங்களூரு அணியை துவம்சம் செய்த டெல்லி கேபிட்டல்ஸ்
நடப்பு ஐபிஎல் தொடரின் 50வது ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
விராட் கோலியின் அரைசதம்
டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்கள் குவித்தது. விராட் கோலி 46 பந்துகளில் 55 ஓட்டங்களும், லொம்ரோர் 29 பந்துகளில் 54 ஓட்டங்களும் விளாசினர். ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் 45 ஓட்டங்கள் குவித்தார்.
Lom???? ????? ?
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 6, 2023
Brings up his maiden IPL fifty! ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #DCvRCB @mahipallomror36 pic.twitter.com/Jn1HNtYvw8
பின்னர் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் டேவிட் வார்னர் 22 ஓட்டங்களில் வெளியேறினார்.
A half-century of half-centuries in the IPL ?
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 6, 2023
Milestone-making is a lifestyle for the King!#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #DCvRCB #ViratKohli pic.twitter.com/kKDM8vCkqY
வாணவேடிக்கை காட்டிய பிலிப் சால்ட்
அதன் பின் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பிலிப் சால்ட் வாணவேடிக்கை காட்டினார். சிக்ஸர்களை பறக்கவிட்ட சால்ட், அதிரடியாக அரைசதம் கடந்தார்.
அவருடன் இணைந்த ரிலீ ரோசௌவ்வும் அதிரடியில் மிரட்டினார். டெல்லி அணி மிரட்டல் வெற்றி அணியின் ஸ்கோர் 171 ஆக உயர்ந்தபோது சால்ட் 87 (45) ஓட்டங்களில் கர்ன் சர்மா ஓவரில் போல்ட் ஆனார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும்.
????haal, hamare khushi ki wajah ? pic.twitter.com/MTzgWo3OuK
— Delhi Capitals (@DelhiCapitals) May 6, 2023
டெல்லி அணியின் வெற்றிக்கு 17வது ஓவரில் 1 ரன் தேவைப்பட்டபோது, ரோசௌவ் சிக்ஸர் அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 22 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 35 ஓட்டங்கள் விளாசினார்.
That was a ????? big hit ? pic.twitter.com/Re1FhMnt04
— Delhi Capitals (@DelhiCapitals) May 6, 2023
இந்தப் போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 7000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.