கிர்கிஸ்தான் பெண்ணை மணமுடித்த தமிழ் நடிகையின் சகோதரர்: வைரலாகும் புகைப்படங்கள்
பிரபல தொலைக்காட்சி நடிகை பிரியதர்ஷியின் சகோதரர் தர்ஷன், கிர்கிஸ்தான் நாட்டு பெண்ணை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகின.
பிரியதர்ஷினி, திவ்யதர்ஷினி
தாவணிக்கனவுகள், இதயக் கோயில் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரியதர்ஷினி.
அதனைத் தொடர்ந்து, தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய பிரியதர்ஷினி, தற்போது எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.
இவரது தங்கை திவ்யதர்ஷினியும் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பிரபலமாகி படங்களிலும் நடித்தார்.
திருமணம்
இவர்களது சகோதரர் தர்ஷனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. அவர் கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அஜார் என்ற பெண்ணை கரம் பிடித்தார்.

இந்த திருமணம் எந்தவிதமான பிரமாண்ட விளம்பரங்களும் இல்லாமல், எளிமையாக நடைபெற்றது.
எனினும் இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. பிரியதர்ஷினி, திவ்யதர்ஷினியின் ரசிகர்கள் தர்ஷன், அஜார் ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |