பாகிஸ்தானை பந்தாடிய டி காக்! வாணவேடிக்கையில் 123 ஓட்டங்கள்..தரமான பதிலடி
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சல்மான், அயூப், நவாஸ் அரைசதம்
தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பைசலாபாத்தின் இக்பால் மைதானத்தில் நடந்தது. 
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ஓட்டங்கள் சேர்த்தது.
சல்மான் அஹா 69 ஓட்டங்களும், மொஹம்மது நவாஸ் 59 ஓட்டங்களும், சைம் அயூப் 53 ஓட்டங்களும் விளாசினர். பர்கர் 4 விக்கெட்டுகளும், பீட்டர் 3 விக்கெட்டுகளும், போஷ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
டி காக் ருத்ர தாண்டவம்
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் லுஹூன்-ட்ரே பிரிட்டோரியஸ் 40 பந்துகளில் 46 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். 
அடுத்து குயிண்டன் டி காக் (Quinton de Kock), டோனி டி ஸோர்சி (Tony de Zorzi) கைகோர்த்தனர். இந்த கூட்டணி பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. அரைசதம் விளாசிய ஸோர்சி 63 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் குவித்தார்.
மறுபுறம் வாணவேடிக்கை காட்டிய டி காக், ஆட்டமிழக்காமல் 119 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 123 ஓட்டங்கள் விளாச, தென் ஆப்பிரிக்கா 40.1 ஓவரிலேயே 270 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |