காபூலில் விமானத்தில் இருந்து விழுந்த நபர்களின் உடல்கள் சிதறி கிடக்கும் கோர காட்சிகள் வெளியானது! WARNING GRAPHIC CONTENT!!
காபூல் விமான நிலையத்தில் ஓடுபாதையில் அமெரிக்க இராணுவ விமானத்திலிருந்து விழந்த நபர்களின் உடல்கள் சிதறி கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 15ம் திகதி ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோடியதை அடுத்து, தலிபான்கன் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
தலிபான்கள் ஆட்சியின் கீழ் வாழ அஞ்சிய ஆயிரக்கணக்கான மக்கள், நாட்டை விட்டு வெளியே காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.
காபூல் விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமானங்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து, காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்த அமெரிக்க இராணுவம், அதன் இராணுவ போக்குவரத்து விமானங்கள் மூலம் அமெரிக்கர்களை ஆப்கானிலிருந்து வெளியேற்றியது.
WARNING GRAPHIC CONTENT!!.... வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்...
காபூல் இருந்து புறப்பட்ட C17 விமானத்தின் சக்கரத்தில் பயணித்த ஆப்கானியர்கள், நடுவானிலிருந்து கீழே விழுந்து பலியான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான விசாரணை முன்னெடுத்துள்ளதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், C17 விமானத்திலிருந்து கீழே விழுந்தவர்கள் 3 பேரின் உடல்கள் காபூல் விமான நிலையத்தின் ஓடுபாதையில் சிதறி கிடக்கும் கோர காட்சி வெளியாகியுள்ளது.