கைகளில் விலங்கிடப்பட்டு முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு இறந்துகிடந்த அழகிய இளம்பெண் சாவில் மர்மம்
அழகிய இளம்பெண் ஒருவர், கைகளில் விலங்கிடப்பட்டு, முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட நிலையில் இறந்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது மரணம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
துருக்கியில் வாழும் Kristina Novitskaya (30), அவரது வீட்டில் கைகளில் விலங்கிடப்பட்டு முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் இறந்து சில நாட்களாகியிருக்கும் என கருதப்படுகிறது. உக்ரைனிய மொழிபெயர்ப்பாளராகவும், நடன பயிற்சியளிப்பவராகவும் பணியாற்றிவந்த Kristina சடலமாக கண்டெடுக்கப்பட்டபோது, அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்திருக்கிறது.
ஜன்னல் கதவுகள் எல்லாம் மூடப்பட்டிருந்திருக்கின்றன. ஆகவே, Kristina தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
ஆனால், Kristina வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் ஆசை கொண்டவர் என்றும், அதனால் அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்றும் அவரது தோழிகள் தெரிவிக்கிறார்கள்.
என்றாலும் அவரது நடவடிக்கைகளை Kristina இரகசியமாகவே வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், Kristinaவின் மரணத்தால் அதிர்ச்சியடைந்திருக்கும் அவரது நண்பர்கள், அவரது மரணத்துக்கும் முக்கியப் புள்ளி ஒருவருக்கும் தொடர்பிருக்கலாம் என கருதுகிறார்கள். Kristinaவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.




