பிணவறையில் திடீரென கண்விழித்த சடலம்! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்.. நடந்தது என்ன?
ஸ்பெயினில் இறந்தவர் ஒருவர் திடீரென உயிர் பிழைத்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் Villabona பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் தங்கியுள்ளனர்.
இங்கு Gonzalo Montoya Jimenez என்ற கைதிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது, இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் நிற மாறுதலை வைத்து அந்த நபர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் சொன்ன தகவலையடுத்து உயிரிழந்த நபரின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உயிரிழந்த Gonzalo Montoya Jimenez-யின் உடலை சட்டப்படி பிரேத பரிசோதனை ஏற்பாடு செய்தனர்.
அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ய முனைந்த போது Gonzalo திடீரென கண்விழித்து எழுந்து அமர்ந்த சம்பவம் அங்கிருந்த மருத்துவர்களை நடுங்க செய்தது.
இதனையடுத்து Gonzalo-வை மீண்டும் பரிசோதனை மருத்துவர்கள் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்ததையடுத்து நடந்த தவறுக்காக அவரது உறவினர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.