சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டபின் திடீரென கண்களைத் திறந்த நபர்: அதிர்ச்சியடைந்த உறவினர்கள்
வெளிநாடொன்றில், சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட ஒருவர், திடீரென கண் விழித்த சம்பவம் அவரது உறவினர்களை அதிர்ச்சியடையவைத்தது.
சவப்பெட்டிக்குள் திடீரென கண்களைத் திறந்த நபர்
டொமினிக்கன் குடியரசில், உயிரிழந்த ஒருவரின் உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு, அவரது உறவினர்கள் அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக கூடியிருந்தனர்.
அப்போது, திடீரென சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட அந்த நபர், கண் விழிக்க, கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
Getty Images
ஆனால், உயிரிழந்த உடல்களிலுள்ள தசைகள் சுருங்குவதால் இப்படி நடக்க வாய்ப்புண்டு. அந்த நிகழ்வு rigor mortis என அழைக்கப்படுகிறது.
உடலை பதப்படுத்தும் முன் கண் திறந்த இளம்பெண்
இப்படி, உயிரிழந்து, இறுதிச்சடங்கு மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபின் மீண்டும் உயிர் பிழைத்த பலர் இருக்கிறார்கள்.
2020ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், அமெரிக்காவின் டெட்ராயிட் என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த Timesha Beauchamp (20) என்னும் இளம்பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
மருத்துவ உதவிக்குழுவினர் வந்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
Timesha உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவிக்க, அவரது உறவினர்கள் அவரை இறுதிச்சடங்கு மையத்துக்குக் கொண்டு சென்றார்கள்.
Timeshaவின் உடலை பதப்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. ஆகவே, அவரது உடலை பதப்படுத்தும் முயற்சியை இறுதிச்சடங்கு மைய பணியாளர்கள் துவக்க முயலும்போது, Timesha உயிருடன் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். வென்டிலேட்டரில் அவரை வைத்தார்கள். என்றாலும், இரண்டு மாதங்களுக்குப் பின் உயிரிழந்துவிட்டார் Timesha.
Timesha, ஆட்டிஸக் குறைபாடு கொண்ட இளம்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |