மாடியிலிருந்து விழுந்த சிறுவன்... நடு வீட்டில் ஆடைகளின்றி தொங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணின் உடல்: ஒரு வித்தியாசமான வழக்கு
அமெரிக்காவில், திருமண வாழ்வு தோல்வியுற்றதால் ஏற்கனவே இருமுறை திருமணமாகி மனைவிகளைப் பிரிந்த ஒருவரை காதலிக்கத் தொடங்கினார் ஒரு பெண்.
கலிபோர்னியாவில் வாழ்ந்துவந்த ஆசிய பின்னணியைக் கொண்ட Rebecca Zahau (32) என்ற அந்த பெண்ணுக்கு, தான் காதலிக்கும் நபர் ஒரு கோடீஸ்வரர் என்பது முதலில் தெரியாது
Jonah Shacknai என்ற அந்த செல்வந்தருக்கு Max (6) என்ற மகன் இருந்தான். பிறகு Jonahவின் வீட்டிலேயே வாழத்துவங்கிய Rebecca, குழந்தை Maxஐ தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு கவனிக்கத்தொடங்கியுள்ளார்.
ஆனால், காதலர், குழந்தை என புதிய வாழ்வு துவங்கும் நேரத்தில் விதி வேறு விதமாக விளையாடத் துவங்கியுள்ளது.

ஒருநாள் பலத்த சத்தம் கேட்டு ஓடிவந்த Rebecca, குழந்தை Max தனது ஸ்கூட்டருடன் மாடியிலிருந்து விழுந்து சுயநினைவில்லாமல் கிடப்பதையும், அவனது செல்ல நாய் குரைத்துக்கொண்டிருப்பதையும் கண்டு பதறி சத்தமிட, உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
Jonah குழந்தையுடன் மருத்துவமனையில் தங்கியிருக்க, அவரது சகோதரரான Adam Shacknai (48)ம் Rebeccaவும் வீடு திரும்பியிருக்கிறார்கள்.
மறுநாள் காலை 6.48 மணிக்கு பொலிசாரை அவசரமாக அழைத்துள்ளார் Adam. என் வீட்டில் ஒரு பெண் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறார் என பதறியபடி அவர் அழைக்கும் சத்தமும், Rebeccaவை எழுப்ப முயலும் சத்தமும் பொலிசாரின் அழைப்பில் பதிவாகியுள்ளன.

பொலிசார் சென்று பார்க்கும்போது, Rebecca முழு நிர்வாணமாக, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், கால்கள் இரண்டும் இறுக்கமாக கட்டப்பட்டு, வாயில் துணி அடைக்கப்பட்டு, தலையில் ஒரு சட்டை சுற்றப்பட்டு இறந்து கிடந்திருக்கிறார். அவருக்கு அருகில் சுவரில் ’அவள் அவனைக் காப்பாற்றிவிட்டாள், உன்னால் அவளைக் காப்பாற்ற முடியுமா?’ என கிறுக்கப்பட்டிருந்திருக்கிறது.
தன் கண்காணிப்பில் இருந்த Max கீழே விழுந்து படுகாயமடைந்துவிட்டதால், ஆசிய நாட்டவரான Rebecca குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்துகொண்டதாக Adam கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் குழந்தை Maxக்கு நினைவு திரும்பாமலே இறந்துபோயிருக்கிறான். ஆக, என்ன நடந்தது என்று சொல்ல அவனும் இல்லை.

ஆனால், Rebeccaவின் குடும்பத்தினர் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில், அவர் எப்படி தானே தூக்கிட்டுக்கொண்டிருக்கமுடியும், மிகவும் வெட்கப்படும் குணம் கொண்ட அவர் எப்படி முழு நிர்வாணமாக வீட்டின் நடுவே தூக்கிட்டுக்கொள்ள முடிவு செய்தார் என்று கேட்கிறார்கள் அவர்கள். அத்துடன் அவரது தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, Adamதான் அவரை அடித்துக் கொன்று தொங்கவிட்டிருக்கவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
எனவே, நீதிமன்றம் Adamதான் Rebeccaவை கொலை செய்தார் என்ற முடிவுக்கு வந்து, அவரது குடும்பத்துக்கு இழப்பீடாக 5 மில்லியன் டொலர்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது.
Adam, இன்னமும் தான் நிரபராதி என்று கூறிக்கொண்டே இருக்கிறார். குழந்தைக்கு என்ன ஆனது, அவன் எப்படி கீழே விழுந்தான், சுவரில் அந்த வார்த்தைகளை எழுதியது யார், என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் இல்லை...


 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        