ரஷ்ய ஜனாதிபதி புடின் தான் இலக்கு: உக்ரைனின் கொடூர பெண் ஸ்னிப்பர் சூளுரை
ரஷ்யாவின் நெருக்கடிகளை எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ள தயார் என உக்ரைனின் பிரபலமான பெண் ஸ்னிப்பர் ஒருவர் சூளுரைத்துள்ளார்.
தென்கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் சுமார் 10 பிரிவினைவாதிகளை சுட்டுக்கொன்றதாக கூறும் கொடூர ஸ்னிப்பர் என அடையாளம் காணப்பட்டுள்ள 42 வயது Olena Bilozerska என்பவரே ரஷ்யா தொடர்பில் சூளுரைத்துள்ளார்.
ரஷ்யாவின் நெருக்கடிகளை எதிர்கொள்ள தாம் எந்த நேரமும் தயார் என தெரிவித்துள்ள அவர், ரஷ்ய ஜனாதிபதி புடின் தான் தமது இலக்கு எனவும் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், 2017ல் உக்ரைன் நாட்டின் சுதந்திர தினத்தன்று நடந்த ரஷ்ய ராணுவத்தின் ஊடுருவலை தாம் துணிச்சலுடன் முறியடித்ததையும், மூவர் கும்பலில் இருவரை சுட்டுக்கொன்றதையும் ஒருவரை காயங்களுடன் தப்ப விட்டதையும் தற்போது அவர் காணொளியாக வெளியிட்டுள்ளார்.
உக்ரைனுக்காக தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த Olena Bilozerska, பின்னர் ராணுவத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். போர்க்களத்தில் நமது குடும்பம், பிள்ளைகள், உறவினர் என எவரும் கருத்தில்க்கொள்வதில்லை எனவும், அதையே தாம் நாமும் நமது எதிரிகளை எதிர்கொள்ளும் போதும் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் Olena Bilozerska.
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் குடியிருக்கும் Olena Bilozerska, நாடு முழுவதும் அறியப்படும் ஸ்னிப்பர் எனபது மட்டுமின்றி, அவர் எழுதி வெளியிட்ட புத்தகம் ஒன்று பெரும் வரவேர்ப்பையும் பெற்றது.
2020 முதல் கணவருடன் உக்ரைனின் பிராந்திய பாதுகாப்பு படையில் இணைந்து செயல்பட்டு வருகிறார் Olena Bilozerska. இருப்பினும் நாட்டுக்கு ஒரு சிக்கல் என்றால் போருக்கு புறப்பட தயார் நிலையில் இருப்பதாகவே அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்ய ஜனாதி புடின், உக்ரைன் எல்லையில் நடத்தும் நாடகம் வெறும் கண்துடைப்பு எனவும், உக்ரைன் மீது அழுத்தம் தர வேண்டும் என்பதால் மட்டுமே எல்லையில் ஆயுதங்களையும் துருப்புகளையும் குவித்து வருகிரார் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.