2025ல் உலகம் மொத்தம் நடுக்கத்தை ஏற்படுத்திய 12 விமான விபத்துக்கள்
விமான பயணங்கள் பாதுகாப்பானதா என்ற மிகப்பெரிய கேள்வியை பொதுமக்கள் மத்திய எழுப்ப வைத்த ஆண்டு 2025 என்றே கூறுகின்றனர்.
ரேடாரில் இருந்து மாயமானது
241 பயணிகள் மொத்தமாக மரணமடைந்த, ஏர் இந்தியா விமான விபத்து உட்பட 2025 ஆம் ஆண்டு விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகவும் சோகமான சில நிகழ்வுகளைக் கண்டது.
2025 ஜனவரி மாதம் 29ம் திகதி அமெரிக்க இராணுவத்தின் Black Hawk ஹெலிகொப்டர் ஒன்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்துடன் நடுவானில் மோதிய சம்பவத்தில் மொத்தம் 67 பயணிகள் கொல்லப்பட்டனர்.

ஜனவரி 31ம் திகதி மெட் ஜெட்ஸ் விமானம் 056, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவில் விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர்கள் கொல்லப்பட்டதுடன், 23 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
பிப்ரவரி 6ம் திகதி பெரிங் ஏர் விமானம் தரையிறங்க,வெறும் 10 நிமிடங்கள் எஞ்சிய நிலையில் ரேடாரில் இருந்து மாயமானது. பின்னர் அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதில் பயணித்த 10 பயணிகளும் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 17ம் திகதி டெல்டா கனெக்ஷன் விமானம் 4819, ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக 80 பயணிகளும் உயிர் தப்ப, 21 பயணிகள் காயமடைந்தனர்.
மார்ச் 17ம் திகதி லன்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் 018, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 17 பேரில் 12 பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் ஹோண்டுராஸ் இசைக்கலைஞர் ஆரேலியோ மார்டினெஸும் ஒருவர்.
ஜூன் 12ம் திகதி லண்டன் புறப்பட்டவிருந்த ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது. இதில், விமானத்தில் இருந்த 242 பயணிகளில் 241 பேர்களும், தரையில் இருந்த 19 பேர்களும் மரணமடைந்தனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
ஜூலை 24ம் திகதி ரஷ்யாவில் அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் விபத்தில் சிக்கியதில் 42 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் மரணமடைந்தனர். அக்டோபர் 20ம் திகதி துருக்கி நிறுவனத்தின் எமிரேட்ஸ் சரக்கு விமானம் ஒன்று ஹொங்ஹொங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் சறுக்கிச் சென்றது.
இந்தச் சம்பவத்தில் ஹொங்ஹொங் விமான நிலையத்தின் இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். அக்டோபர் 28ம் திகதி மசாய் மாரா தேசிய வனவிலங்கு காப்பகத்திற்குச் சென்று கொண்டிருந்த மொம்பாசா ஏர் சஃபாரி விமானம் 203, கென்யாவின் குவாலே கடற்கரைப் பகுதியில் விபத்துக்குள்ளானதில், பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளான 11 பேர் மரணமடைந்தனர்.

நவம்பர் 4ம் திகதி McDonnell Douglas MD-11 விமானமானது ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே ஒரு தொழில்துறைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மூன்று பணியாளர்கள் உட்பட பதினான்கு பேர் மரணமடைந்தனர்.
நவம்பர் 21ம் திகதி துபாயில் நடந்த விமானக் கண்கட்சியில் இந்திய போர் விமானம் Tejas விபத்தில் சிக்கியதில், அதன் விமானி மரணமடைந்தார். டிசம்பர் 23ம் திகதி லிபியாவின் ஆயுதப் படைகளின் தலைவர் மற்றும் மேலும் நான்கு உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரிகள், அங்காராவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர்களின் வணிக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் மரணமடைந்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |