பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த பயங்கரம்: குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் வெடிப்பு
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா(Quetta) ரயில் நிலையத்தில் சனிக்கிழமை பயங்கர வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்து இருப்பதுடன் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
❗️Explosion In Pakistan’s Balochistan Kills 20, Injures Dozens
— RT_India (@RT_India_news) November 9, 2024
A fatal blast occurred at Quetta Railway Station on Saturday,as a train prepared to depart for Peshawar, Dawn News reports.
pic.twitter.com/legfib50zP
பெஷாவர்(Peshawar) நோக்கி புறப்பட ரயில் தயாராக இருந்த நிலையில் ரயில் நிலைய நடைபாதையில் இந்த வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
பயங்கரவாத தாக்குதலா?
இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரி முகமது பலோச்(Mohammad Baloch) தெரிவித்தார்.
இருப்பினும் சரியான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணை தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Scene at #Quetta #Railway station after the huge blast carried out by a suicide bomber of Baloch Liberation Army (BLA). #Balochistan #Hakkal https://t.co/1fDdaXQIWh pic.twitter.com/g8kuEieQS1
— News Vibes of India (@nviTweets) November 9, 2024
பயங்கர வெடிப்பின் போது குறைந்தது 100 பேர் ரயில் நிலையத்தில் இருந்ததாகவும் முகமது பலோச் தகவல் அளித்துள்ளார்.
பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலிருந்து ராவல்பிண்டிக்கு(Rawalpindi) செல்லும் ரயிலை பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு நிகழ்ந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |