கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பயங்கரம்.. மக்கள் குவிந்திருந்த உணவகத்தில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மக்கள் குவிந்திருந்த உணவகத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
பெனி நகரில் உள்ள பிரபல உணவகத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
உணவக கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற தற்கொலைதாரியை பொலிசார் தடுத்துள்ளனர், ஆனால் அவன் நுழைவு வாயிலிலே தன்னை தானே வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளான்.
இதில், தற்கொலைதாரி உட்பட சம்பவயிடத்திலிருந்த 6 பேர் பலியாகினர், 13 பேர் காயமடைந்தனர்.
ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ள Allied Democratic Forces (ADF) என்ற போராளிகள் குழு தான் இந்த தற்கொலை தாக்குதலுக்கு காரணம் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனினும், தற்போது வரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
தற்கொலை தாக்குதலின் போது உணவகத்திற்குள் பெண்கள், குழந்தைகள் என 30-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.