ஐரோப்பாவை சுட்டெரிக்கும் வெப்ப அலை... பொது நிகழ்ச்சிகள் மொத்தம் நிறுத்தம்

Heat wave Europe
By Arbin Jun 27, 2026 03:23 AM GMT
Report

ஐரோப்பாவில் நிலவும் வெப்ப அலையால் இறப்புகள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமையன்று ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஜூன் மாதத்திற்கான வெப்பநிலை சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

மிக அதிகபட்ச வெப்பநிலை

ஸ்பெயின் மற்றும் பிரான்சில் சுகாதார அச்சுறுத்தல்கள் காரணமாக இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொது நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

ஐரோப்பாவை சுட்டெரிக்கும் வெப்ப அலை... பொது நிகழ்ச்சிகள் மொத்தம் நிறுத்தம் | Deadly Heatwave Halts Public Events

ஜேர்மனியின் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பநிலையான 41.3 டிகிரி செல்சியஸ், பிரான்ஸ் எல்லைக்கு அருகிலுள்ள தென்மேற்கு நகரமான சார்ப்ரூக்கனில் (Saarbrücken) பதிவானது.

பிரான்ஸ் மக்கள் இந்த வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக மிக அதிகபட்ச வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளனர். பிரான்சில் வெப்ப அலை உச்சத்தை அடைந்திருந்தபோதிலும், வீடுகளில் மரணங்கள் நிகழ்வது குறிப்பாகக் கவலையளிப்பதாக சுகாதார அமைச்சர் ஸ்டெஃபானி ரிஸ்ட் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் ஜூன் மாத வெப்ப அலை மெதுவாக வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ள நிலையில், டச்சு எல்லைக்கு அருகிலுள்ள க்ளைன் ப்ரோகல் என்ற இடத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக பெல்ஜிய வானிலை முன்னறிவிப்பாளர் டேவிட் டெஹெனாவ் தெரிவித்தார்.

தென் கொரியாவின் தலைநகரை மொத்தமாக அழிக்கும் ஆயுதம்: பாராட்டிய வட கொரியாவின் கிம்

தென் கொரியாவின் தலைநகரை மொத்தமாக அழிக்கும் ஆயுதம்: பாராட்டிய வட கொரியாவின் கிம்

நெதர்லாந்தின் தெற்கு மாகாணமான லிம்பர்க்கில் அதிகபட்சமாக 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதற்கிடையில், பிரித்தானியாவில் சஃபோல்க் மாகாணத்தின் கேவென்டிஷ் நகரில், ஜூன் மாதத்திற்கான தற்காலிக சாதனை அளவாக 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், வெள்ளிக்கிழமையன்று ஐரோப்பியக் கண்டம் முழுவதும் குறைந்தது 15 கோடி மக்கள் 35 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இதனிடையே, 2012-ஆம் ஆண்டின் சாதனை வெப்பநிலையான 40.4 டிகிரி செல்சியஸ், சனிக்கிழமையன்று முறியடிக்கப்படலாம் என செக் நாட்டு வானிலை ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதேவேளையில், இதுவரையான தேசிய சாதனை ஞாயிற்றுக்கிழமை முறியடிக்கப்படும் என ஆஸ்திரிய வானிலை ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஐரோப்பாவை சுட்டெரிக்கும் வெப்ப அலை... பொது நிகழ்ச்சிகள் மொத்தம் நிறுத்தம் | Deadly Heatwave Halts Public Events

பால்கன் நாடுகளிலும் கடும் வெப்பம் நிலவுகிறது; வார இறுதியில் செர்பியாவில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பெஸ்னா அணுமின் நிலையம், ஆரே ஆற்றில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை எட்டியதால், வெள்ளிக்கிழமை அன்று தனது இரண்டு அணு உலைகளையும் மின் இணைப்பிலிருந்து துண்டித்தது.

பெரிய நிகழ்வுகள் ரத்து

இந்த வெப்பநிலை, அணு உலைகளைப் போதுமான அளவு குளிர்விக்க முடியாத அளவுக்கு மிக அதிகம் எனக் கருதப்படுகிறது. பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் தெற்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் வெப்பநிலை பருவக்கால சராசரியை விட 5 முதல் 12 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உள்ளது.

கடும் வெப்பம் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை பிரஸ்ஸல்ஸுக்கு கிழக்கே, கொலோனிலிருந்து பாரிஸ் சென்றுகொண்டிருந்த யூரோஸ்டார் ரயில், சுமார் 400 பயணிகளுடன் பழுதடைந்து நின்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக பெல்கா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நிர்வாக அலுவலகத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து, சுகாதார அச்சங்கள் காரணமாக வார இறுதியில் பாரிஸில் நடைபெறவிருந்த இரண்டு பெரிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. உரிய கட்டுப்பாடுகளுடன் மூன்றாவது பெரிய நிகழ்ச்சி ஒன்று ஞாயிறன்று மாற்றப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவை சுட்டெரிக்கும் வெப்ப அலை... பொது நிகழ்ச்சிகள் மொத்தம் நிறுத்தம் | Deadly Heatwave Halts Public Events

சனிக்கிழமை நடைபெறவிருந்த ஹாம்பர்க் அரை மாரத்தான் உட்பட, ஜேர்மனியில் ஏராளமான நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடுமையான நிலைமைகள் கூடுதல் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என பிரெஞ்சு சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ள நிலையில், சுகாதாரத் துறையில் நிலவும் பல்வேறு பதற்றங்கள் காரணமாக பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஓர் அவசரகாலத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, பிரான்சில் வெப்ப அலை தொடங்கியதிலிருந்து நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US