விஷ சாராயம் அருந்தியவர்களில் 31 பேர் மரணம்! 183 பேர் கைது..கதறும் குடும்பங்கள்
இந்திய மாநிலம் பீகாரில் விஷ சாராயம் அருந்தியவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூரண மதுவிலக்கு
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு சிலர் சட்டவிரோதமாக மது தயாரித்து விற்பனை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை வாங்கி அருந்தும் பலர் உடல்நலம் கடுமையாக பாதித்து உயிரிழந்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மொதிஹரி, துர்குலியா மற்றும் பஹர்பூர் கிராமங்களைச் சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக விற்கப்பட்ட மதுவை வாங்கி அருந்தியுள்ளனர்.
இதில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
31 பேர் மரணம்
நேற்றைய நிலவரப்படி சிகிச்சை பலனின்றி 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 31 ஆகியுள்ளது.
இந்த துயரத்தில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் கதறி அழுதனர்.
இதற்கிடையில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற கும்பலைச் சேர்ந்த 26 பேர் உட்பட மொத்தம் 183 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.