மரண தண்டனைக் கைதியின் வித்தியாசமான கோரிக்கை
Death row inmate begs state to delay his execution: மரண தண்டனைக் கைதி ஒருவர், தனது தண்டனையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவர், தனது தண்டனையை நிறைவேற்றுவதை தள்ளிவைக்குமாறு கோரியுள்ளார்.
வித்தியாசமான காரணம்
அமெரிக்கரான ஸ்டீவன் பிக்ஸ்பி என்பவருக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் Thanksgiving போன்ற பண்டிகைக்காலத்தில் தனது தண்டனையை நிறைவேற்றவேண்டாம் என அவர் கேட்டுகொண்டுள்ளார்.

குடும்பங்களுக்கு மிக முக்கியமான காலகட்டமான பண்டிகைக்காலத்தில் மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராவதும், மரண தண்டனையை நிறைவேற்றுவதும், அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என, பிக்ஸ்பி அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி இண்டிபென்டண்ட் பத்திரிகை தெரிவிக்கிறது.
எதற்காக மரண தண்டனை?
2003ஆம் ஆண்டு, அரசு, நெடுஞ்சாலை ஒன்றை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், பிக்ஸ்பியும் அவரது பெற்றோரான ரீட்டா மற்றும் ஆர்தரும், சாலையை விரிவாக்கம் செய்வதால், அந்த இடத்தை ஒட்டி அமைந்துள்ள தங்கள் நிலம் பறிபோகும் என்று கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அரசு அதிகாரிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து, பொலிஸ் அதிகாரி ஒருவர் பிக்ஸ்பியின் வீட்டுக்குச் செல்ல, அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துவைத்துக்கொண்டது பிக்ஸ்பியின் குடும்பம்.

அதைத் தொடர்ந்து மற்றொரு பொலிசார் பிக்ஸ்பி வீட்டுக்குச் செல்ல, அவரும் சுடப்பட்டார்.
14 மணி நேரமாக நடந்த இழுபறிக்குப் பிறகு பிக்ஸ்பி குடும்பம் கைது செய்யப்பட்டது. ஆனால், துப்பாக்கியால் சுடப்பட்ட பொலிசார் இருவரும் உயிரிழந்துவிட்டார்கள்.
2011ஆம் ஆண்டு, ஆர்தர் மன நல மருத்துவமனை ஒன்றில் மரணமடைய, அவரது மனைவியான ரீட்டா ஒரு வாரத்துக்குப் பின் சிறையில் உயிரிழந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த வழக்கில்தான் பிக்ஸ்பிக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இதற்கிடையில், மரண தண்டனை நிறைவேற்றும்போது உயிர் பிழைத்த கிறிஸ்டா பைக், இப்போதும் தான் கடுமையான வலியால் அவதியுற்றுவருவதாக தெரிவிக்க, மரண தண்டனை தேவையா என்பது தொடர்பில் நாடு முழுவதும் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.