விஷ ஊசியில் இருந்து பிழைத்த மரண தண்டனை கைதி... புதிய ஆபத்தான முறையை முயற்சிக்க முடிவு
அமெரிக்காவில் மூன்று கொலை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு, இதுவரை முயற்சிக்காத புது முறையை பயன்படுத்த சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷ ஊசி மூலமாக மரண தண்டனை
மரண தண்டனை கைதியான ஆலன் யூஜின் மில்லர் என்பவருக்கு விஷ ஊசி மூலமாக மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், குறித்த தண்டனை நிறைவேற்றிய நிலையில், அவரது உயிர் பிரியவில்லை என்றே கூறப்படுகிறது.
@getty
மட்டுமின்றி மருத்துவர்களும் அதை உறுதி செய்ததுடன், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆலன் யூஜின் மில்லர் சார்பாக புகார் ஒன்றும் அளிக்கப்பட்டது, அதில் ஆலன் யூஜின் மில்லர் மனதளவிலும் உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், விஷ ஊசி செலுத்த முயற்சிக்கும் போது ஏற்பட்ட காயங்களில் இருந்து ரத்தம் கசிந்ததாகவும், இது சித்திரவதைக்கு ஒப்பானது எனவும், சட்டத்திற்கு புறம்பானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை எவருக்கும் முயற்சிக்காத
இதனையடுத்து ஆலன் யூஜின் மில்லர் சார்பில் அளிக்கப்பட்ட புகாருக்கு பதிலளித்துள்ள சிறை நிர்வாகம், அலபாமா மாகாணத்தில் இதுவரை எவருக்கும் முயற்சிக்காத, ஆபத்தான விஷ வாயுவை செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டுள்ளது.
@Shutterstock
விஷ வாயு பயன்படுத்தி இதுவரை எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை, அதற்கான நெறிமுறைகளும் வகுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், இனி ஒருமுறை மில்லருக்கு விஷ ஊசியால் மரண தண்டனை நிறைவேற்றுவதில்லை என நீதிமன்றம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மில்லருக்கு nitrogen hypoxia என்ற வாயுவை சுவாசிக்க வைத்து, மரண தண்டனையை நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.
அவரது முகத்திற்கு முகமூடி ஒன்றை பொருத்தி, அதன்மூலம் ஆபத்தான nitrogen hypoxia வாயுவை சுவாசிக்க வைக்க உள்ளனர்.