7 ஆண்டுகளாக தண்ணிகாட்டிய பங்களாதேஷ் மரண தண்டனை கைதி; திட்டம்போட்டு வசமாக பிடித்த இந்திய பொலிஸ்
பங்களாதேஷில் கடத்தல், கொள்ளை மற்றும் கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்கு முன்பு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர், டெல்லியின் கான்பூரிலிருந்து சனிக்கிழமை ஒரு கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.
இந்திய தலைநகரான டெல்லி காவல்துறையினரின் தகவல்களின்படி, 2005 ஆம் ஆண்டு பங்களாதேஷில் மௌஸம் அலி என்கிற சர்பார் (40) , அவரது 4 கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜாஹிதுல் இஸ்லாம் என்பவரைக் கடத்தி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே, அவர் 2010-ஆம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்து, இந்தியாவுக்கு தப்பிவந்துள்ளார்.
பல பயங்கரமான வழக்குகள் சர்பார் மீது இருந்த நிலையில், பங்களாதேஷ் நீதிமன்றம் 2013ல் ஜாஹிதுல் கொலை வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
ஆனால், இந்தியாவுக்கு தப்பிவந்த சர்பார், சில காலம் தலைமறைவாக இருந்து, பின்னர் சட்டவிரோதமாக டெல்லி சீமாபுரியில் ஒரு ஸ்கிராப் டீலராக சொகுசாக வாழ்ந்துவந்துள்ளார்.
இந்நிலையில், இன்ஃபார்மர் ஒருவர் கிரைம் பிரான்ச் குழுவிற்கு அளித்த தகவலின்படி, சர்பாரின் மொபைல் ஃபோன் அழைப்புகளை கண்காணித்த பிறகு, சனிக்கிழமை அவர் தங்கியிருந்த இடத்திலேயே வைத்து கான்பூர் பொலிஸ் அவரை வசமாக கைது செய்தது.
அப்போது சர்பாரிடம் முழுவதுமாக லோட் செய்யப்பட கைது துப்பாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சார்பார் மீது இப்போது, ஆயுதச் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பங்களாதேஷ் தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள
IMP - A DESPERATE CRIMINAL WHO HAS BEEN SENTENCED TO DEATH IN BANGLADEH & RESIDING IN INDIA ILLEGALLY, ARRESTED WITH A LOADED PISTOL BY STF, CRIME BRANCH. @indiatvnews pic.twitter.com/ON5rldSohL
— Abhay parashar (@abhayparashar) December 26, 2020