ஏமன் நாட்டில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து
ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மரண தண்டனை ரத்து
இந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (Nimisha Priya). இவர் நர்ஸ் வேலை படித்திருப்பதால் 2008-ம் ஆண்டில் ஏமன் நாட்டிற்கு சென்று பல மருத்துவமனைகளில் பணிபுரிந்துள்ளார்.
இதையடுத்து, அவர் கிளினிக் தொடங்கவும் முடிவு செய்துள்ளார். ஆனால், ஏமன் நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் ஒருவர் பார்ட்னராக இருக்க வேண்டும்.
இதற்காக, 2014-ம் ஆண்டில் தலால் அப்டோ மெஹ்தி என்பவரை பார்ட்னராக சேர்த்துள்ளார். ஆனால், நாட்கள் கடக்கையில் நிமிஷா பிரியாவை மெஹ்தி மிரட்டியுள்ளார்.
இது குறித்து புகார் அளித்ததன் பேரில் 2016-ம் ஆண்டில் மெஹ்தி கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் விடுதலையாகி வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, மெஹ்தி பறிமுதல் செய்து வைத்திருந்த பாஸ்போர்ட்டை மீட்கும் விவகாரத்தில் மெஹ்தி உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. பின்பு, மெஹ்தியை கொலை செய்து விட்டு ஏமனில் இருந்து தப்ப முயன்றதாக நிமிஷா ஏமன் எல்லையில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து இந்திய அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஏமன் நாட்டின் மதகுருவிடம் கேரள மாநில மதகுரு பேசியதால் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கிராண்ட் முஃப்தி அபுபக்கர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |