இறுதிச் சடங்கில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் உயிரிழப்பு..மூவருக்கு மரண தண்டனை விதித்த நாடு
Death sentence to three men in jordan: ஜோர்டானில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஜோர்டான் நாட்டில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி, 9 பேரைக் கொன்ற மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு தாக்குதல்
மத்திய கிழக்கு நாடான ஜோர்டானில் உள்ள தெற்கு ஹம்மூத் கிராமத்தில், கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் திகதி அன்று தேவாலயத்தில் இறுதிச்சடங்கு நடந்தது.
அப்போது திடீரென உள்ளே புகுந்த மூவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். அதில் 9 பேர் உயிரிழக்க, 25 பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து தப்பியோடிய தாக்குதல்தாரிகள் மூன்று நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஜோர்டானிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய மூன்று குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து, மாநிலப் பாதுகாப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது" என தெரிவித்துள்ளது.
