கோர விபத்தில் மேலும் ஒருவர் பலி! பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்த சடலம்
தமிழக மாவட்டம் நீலகிரியில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
அதிர்ச்சி விபத்து
நீலகியின் குன்னூர் அருகே சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 32 பேர் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 15 பேர் லேசான காயம் அடைந்தனர்.
பத்மா ராணி (58) என்ற காணாமல் போனதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
மீட்கப்பட்ட பெண்ணின் உடல்
அப்போது பேருந்தின் அடியில் பத்மா ராணி சிக்கி சடலமாக கிடந்தது தெரிய வந்தது. அவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனால் குன்னூர் கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் விபத்திற்குள்ளான பேருந்து கிரேன் மூலம் மீட்கும் பணி நடந்தது.
இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |