உக்ரைனுக்கு நிதியுதவியை வாரிவழங்கிய ஹாலிவுட் நடிகர்: இரத்த சம்மந்தம் காரணமா?
ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக பல நாடுகளும் நிதியுதவி வழங்கிவரும் நிலையில், 10 மில்லியன் அமெரிக்கா டாலர்களை ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோ வழங்கியுள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா தனது போரை தொடங்கி கடுமையான தாக்குதல் நடத்தி வருவதால் அந்த நாட்டின் பெரும்பாலான நகரங்கள் சிதைக்கப்பட்டு மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் வழங்கும் விதமாக பல்வேறு நாடுகளும் நிதியுதவி வழங்கிவரும் நிலையில், உக்ரைன் நாட்டுடன் பூர்விக உறவுகொண்ட பிரபல ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோயும் 10 மில்லியன் அமெரிக்கா டாலர்களை வாரிவழங்க முன்வந்துள்ளார்.
இதற்கு டிகாப்ரியோவுக்கும் உக்ரைனுக்கும் இடையே உள்ள இரத்த சம்மந்தமே காரணம் என சொல்லப்பட்டு வருகிறது.
டிகாப்ரியோவை வளர்த்தெடுத்த அவரது பாட்டி ஹெலெனா உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒடேசா என்ற பகுதியில் பிறந்தவர். இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தால் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தர், அதன் பின்னர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்துள்ளார்.
டி காப்ரியோ போலவே உக்ரைனை பூர்விகமாக கொண்ட மிலா குனிஸ் மற்றும் அஷ்டன் குட்சர் ஆகியோரும் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாக அளித்துள்ளனர்.