மெட்டா நிறுவனத்தில் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு
3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஊழியர்கள் பணிநீக்கம்
செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI வந்தபிறகு உலக முன்னனி நிறுவனங்கள் அதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால், ஊழியர்களின் பணிக்கு அபாயம் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்தும் மெட்டா நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்.
அதாவது, ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு புதிய ஊழியர்களை பணியமர்த்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "நிறுவனத்தின் கொள்கைகளை சீரமைக்கும் ஒருபணி நடைபெற்று வருகிறது. குறைந்த செயல்திறன் கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 3,600 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்படவுள்ளது.
அதாவது 5 சதவீதம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு போதிய இழப்பீடும் வழங்கப்படும்.
ஒரு வருடத்தில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதவர்களை நாங்கள் பொதுவாக நிர்வகிக்கிறோம்.
செப்டம்பர் மாத நிலவரப்படி, மெட்டாவில் மொத்தம் சுமார் 72,400 பணியாளர்கள் உள்ளனர். இதில் 3,600 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்படவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |