நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த CSK வீரர்.. காதலுக்கு உதவிய தோனி! ருசிகர பின்னணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சாகருக்கும், அவரது காதலி ஜெயா பரத்வாஜ்-க்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் தீபக் சாகர், ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் தீபக் சாகர் தனது நீண்ட நாள் காதலி ஜெயா பரத்வாஜை கரம் பிடித்துள்ளார்.
இவர்களது திருமணம் ஆக்ராவில் நடந்தது. இதில் இரு குடும்பத்தின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, புதுமணத் தம்பதியரின் வரவேற்பு விழா டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் 60 கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: Social Media
தீபக் சாகரின் உறவினரான ராகுல் சாகர், திருமண புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Photo Credit: Instagram/Rahul Chahar
2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி ஒன்றில், தீபக் சாகர் முதல் முறையாக ஜெயாவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். இவர்களது காதலுக்கு முதலில் உதவியது தோனி தான். ஜெயா பரத்வாஜிடம் காதலை தெரிவிக்குமாறு தீபக் சாகரிடம் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மைதானத்தில் வைத்து கையில் மோதிரத்துடன் தனது காதலை தீபக் வெளிப்படுத்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.