ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே-வின் நம்பிக்கை நட்சத்திரம் விலகல்! சோகத்தில் ரசிகர்கள்
2022, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சாஹர் விலகியுள்ளார்.
2022 ஐபிஎல் தொடரில் இன்று நடக்கவிருக்கும் போட்டியில் ஐடேஜா தலைமையிலான சென்னை அணியும், டுபிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் மோதவுள்ளன.
விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி, புள்ளிப்பட்டியிலில் 10வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 1 தோல்வி, 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருத்தப்படும் ஆல்-ரவுண்டர் தீபக் சாஹர், அணியில் இடம்பெறாதது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
எனினும், விரைவில் அவர் அணிக்கு திரும்புவார் என சென்னை அணி தெரிவித்து வந்தது.
இந்நிலையில், காயம் காரணமாக 2022, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சாஹர் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 20ம் திகதி கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்தும் தீபக் சாஹ்ர விலகினார்.
பைடனின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி குவித்துள்ளது அம்பலம்!
இதனையடுத்து, காயத்திலிருந்து குணமடைவதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீபக் சாஹர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வந்த தீபக் சாஹருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரிலிருந்து தீபக் சாஹர் விலகியுள்ளது சென்னை அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஐபிஎல் ஏலத்தில் தீபக் சாஹரை சென்னை அணி 14 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.