பைடனின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி குவித்துள்ளது அம்பலம்!
அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி குவித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக்கியுள்ளன. ஆனால், அனைத்து உலக சக்திகளும் இதை பின்பற்றவில்லை.
குறிப்பாக ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீது தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் விடுத்த அழைப்பை இந்தியா நிராகரித்தது.
அதேசமயம், பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை மாபெரும் தள்ளுபடி விலையில் வழங்கி வருகிறது.
மாபெரும் தள்ளுபடிகளால் கவரப்பட்ட இந்தியா, உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் கூடுதலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட தரவுகளிலின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்விட்ட ராப் பாடகரின் இறுதி நிமிடங்கள்! வைரலாகும் காணொளி
ரஷ்ய எரிசக்தியை இந்தியா அதிகமாக சார்ந்திருப்பதை அவர்கள் விரும்பவில்லை என அமெரிக்கா அதிபர ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஜோ பைடனின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்துள்ளதை ராய்ட்டர்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.