Deepfake வீடியோ விவகாரம்: 1 லட்சம் டொலர் இழப்பீடு கேட்டு இத்தாலி பிரதமர் வழக்கு!
Deepfake வீடியோ வெளியிட்டவர்களுக்கு எதிராக இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கு தொடர்ந்த இத்தாலி பிரதமர்
47 வயதாகும் ஜியார்ஜியா மெலோனி இத்தாலியின் முதல் பெண் பிரதமராவார். கடந்த 2022ம் ஆண்டு ஜியார்ஜியா மெலோனி தொடர்பான Deepfake வீடியோ ஒன்று அமெரிக்க ஆபாச வலைதளங்களில் வெளியானது
. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வீடியோ வெளியிட்ட செல்ஃபோனை கண்டறிந்து, 74 வயதான தந்தை மற்றும் 40 வயது மகனிடம் இத்தாலி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 லட்சம் டொலர் இழப்பீடு
இந்நிலையில் தன்னை மோசமாக சித்தரித்து Deepfake வீடியோ வெளியிட்டவர்களுக்கு எதிராக இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அத்துடன் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து 109,345 லட்சம் டொலர் இழப்பீடும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி கேட்டுள்ளார்.
அத்துடன் ஆண்களால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களுக்கு இந்த இழப்பீடு தொகை நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் மெலோனி தெரிவித்துள்ளார்.
மேலும் கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்கள் எந்தவொரு அச்சமும் இல்லாமல் புகார் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Italy, Deepfake, Giorgia Meloni,