Hyundai நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடரான Deepika Padukone
ஹூண்டாய் நிறுவனம் (Hyundai Motor India Limited) தனது பிராண்டு அம்பாசிடராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை நியமித்துள்ளது.
பாலிவுட் நடிகர் Shah Rukh Khan மற்றும் கிரிக்கெட் வீரர் Hardik Pandyaவுக்குப் பிறகு தீபிகா நிறுவனத்தின் மூன்றாவது அடையாளமாக (Brand Ambassador) உள்ளார்.
58 வயதாகும் ஷாருக் கான் தென் கொரிய பிராண்டான ஹூண்டாயுடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிராண்ட் அம்பாசிடராக உள்ளார்.
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Micro SUV Exter காரின் பிராண்ட் அம்பாசிடராக கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை நியமித்தது.
Hyundai
தீபிகா படுகோன்
நிறுவனத்தின் வரவிருக்கும் Mid Range SUV Hyundai Cretaவின் Facelift காரை தீபிகா அறிமுகப்படுத்துவார். இந்த காரின் வெளியீட்டு விழா ஜனவரி 16, 2024 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"திறமையான மற்றும் உலகளாவிய இந்திய அடையாளமான தீபிகா படுகோனே எங்கள் பிராண்ட் தூதராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்று HMIL நிறுவனத்தின் COO Tarun Garg கூறியுள்ளார்.
Hyundai
அதேபோல், 'காலத்தை கடந்து நிற்கும் வாகனங்களை உருவாக்கும் பாரம்பரியத்தை கொண்ட ஒரு பிராண்டுடன் இணைந்திருப்பது பெருமை அளிக்கிறது' என தீபிகா படுகோன் கூறியுள்ளார்.
நவம்பரில் இந்தியாவில் 49,451 வாகனங்களை விற்ற ஹூண்டாய்
ஹூண்டாய் நவம்பர் 2023-ல் இந்தியாவில் மொத்தம் 49,451 கார்களை விற்றது, இது நவம்பர் 2022-ல் விற்கப்பட்ட 48,002 கார்களை விட 3.01% அதிகம். மேலும், இந்நிறுவனம் நடப்பு காலண்டர் ஆண்டில் 6 லட்சம் உள்நாட்டு விற்பனையை கடந்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்ட உள்ளது.
தென் கொரிய நிறுவனத்திற்கு இந்தியா மூன்றாவது பாரிய உலகளாவிய சந்தையாக உள்ளது. 2023-ஆம் ஆண்டில் ஹூண்டாய் உலகளாவிய விற்பனையில் 18.6% பங்களிப்பதன் மூலம் இந்திய சந்தை குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Hyundai Creta Facelift 2024, Hyundai Creta Facelift, Hyundai Brand Ambassador, Deepika Padukone Becomes Global Brand Ambassador Of Hyundai, Shah Rukh Khan, Hardik Pandya