இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: தீப்தி சர்மா படைத்த புதிய சாதனை
மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீராங்கனை என்ற புதிய சாதனையை இந்திய வீராங்கனை தீப்தி சர்மா படைத்துள்ளார்.
இந்தியா அபார வெற்றி
இந்தியா - இலங்கை இடையே திருவனந்தபுரத்தில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதனையடுத்து 113 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13.2 ஓவர்கள் முடிவிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 115 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றி பெற்றுள்ளது.
தீப்தி சர்மா புதிய சாதனை

இந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய சுழற்பந்து வீராங்கனை தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்த விக்கெட்டுகள் மூலம் தீப்தி சர்மா டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த அவுஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் என்பவரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
தீப்தி சர்மா இதுவரை 131 போட்டிகள் விளையாடி மொத்தமாக 115 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |